யாழ்ப்பாணம் கொடிகாமம் – கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியை சேர்ந்த செல்லையா சற்குணநாதன் (வயது 78) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் – கச்சாய் வீதி ஊடாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் , சைக்கிளில் பயணித்த குறித்த முதியவரை மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளாா்.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிருஷ்ணகுமார் சுகிந்தன் (வயது 27) எனும் இளைஞனையும் , முதியவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்தனர்.
வைத்திய சாலையில் சிகிச்சை பயனின்றி முதியவர் உயிரிழந்த நிலையில் , இளைஞன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் , கொடிகாம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.