சினிமா பிரதான செய்திகள்

விஜய் சேதுபதி மீது தாக்குதல் முயற்சி

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா்விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி. தற்போது இந்தியில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துவரும் ‘விக்ரம்’ படத்திலும் நடித்து வருகிறார்

இந்தநிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ ஒன்று இணையத்தில் பரவிருகிறது. என்ன பிரச்சினை, எதனால் குறித்த நபர் விஜய் சேதுபதியைத் தாக்கப் பாய்ந்தார் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக விஜய் சேதுபதி தரப்பு இது தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை எனத் தொிவித்துள்ளனா். விஜய் சேதுபதியைத் தாக்க முயன்ற நபரை விமான நிலையத் தொழில் பாதுகாப்புப் படையினர் கைது செய்து விசாரித்து வருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.