த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படம் அமேசன் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இப்படத்தில் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் இடம்பெற்றுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்தி வந்தனா். . உதாரணமாக இந்தி பேசும் நபர் ஒருவரை பிரகாஷ்ராஜ் அறையும் காட்சி, காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கலண்டர் உள்ளிட்ட காட்சிகளை குறிப்பிட்டு பலரும் ‘ஜெய் பீம்’ படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த கலண்டர் தொடர்பான காட்சியில் வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்துவது போல காட்சியமைக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் தற்போது அமேசன் ப்ரைம் வீடியோவில் மேற்குறிப்பிட்ட அந்த காட்சியில் அந்த கலண்டரில் இருந்த சர்ச்சைக்குரிய படம் நீக்கப்பட்டு சரஸ்வதி படம் வைக்கப்பட்டுள்ளது.