Home பிரதான செய்திகள்ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை

ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை

by admin

உலகின் முதல்தர டென்னிஸ் வீரரான செர்பியாவைச் சோ்ந்த 34 வயதான ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை ஒன்றை புரிந்துள்ளாா். அவர் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோருடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் ஜோகோவிச் புதிய வரலாற்று சாதனை புரிந்துள்ளார். பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்த ஆண்டு இறுதிவரை முதல் இடத்தில் நீடிப்பார்.

அவர் அரை இறுதிப் போட்டியில் போலந்தை சேர்ந்த ஹூபர்ட்டை 3-6, 6-0, 7-6 (7-5) என்ற கணக்கில் வென்றுள்ளாா் . ஜோகோவிச் தொடர்ந்து 348 வாரங்களாக முதல் இடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டு இறுதி வரை அவர்தான் முதல் இடத்தில் நீடிப்பார். இதன் மூலம் ஜோகோவிச் 7-வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளாா்.

அவர் ஏற்கனவே 2011, 2012, 2014, 2015, 2018, 2020, ஆகிய ஆண்டுகளில் முதல் இடத்தில் இருந்தார். தற்போது இந்த ஆண்டிலும் (2021) முதல் வரிசையில் உள்ளார்.

இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த பீட் சாம்ராஸ் 6 ஆண்டுகள் முதல் இடத்தில் இருந்ததே சாதனையாக இருந்தது. இதை ஜோகோவிச் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9 முறையும், பிரஞ்ச் ஓபன் பட்டத்தை 2 தடவையும், விம்பிள்டனை 6 முறையும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 தடவையும் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More