173
டெல்லியில் 2வது நாளாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார். இதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது; எஸ்.பி.பி சார்பில் எஸ்.பி.சரண் விருதை பெற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து பத்மபூஷன் விருதை பிரபல பாடகி சித்ரா பெற்றுக் கொண்டார்
பத்மவிருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இவ்விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Spread the love