இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 16 மடங்கு குறைவு என அவுஸ்திரேலியாவின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிட்டப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் பேரில் இரு தடுப்பூசிகளை செலுத்தியோரில் ஒருவர் மட்டுமே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலையில் தடுப்பூசி செலுத்தாதோரில் 16 பேர் மோசமான பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்திக்க நேரிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தற்போது பைஸர், மாடர்னா நிறுவனங்களில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும், தடுப்பூசி செலுத்தியவர்களுடன் ஒப்பிடும்போது செலுத்தாதவர்கள் 20 மடங்கு கொரோனாவால் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளவர்களாக உள்ளாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது