183
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் பல இடங்களில் இருந்து கொழும்பை நோக்கி வரும் தனியார் பேருந்துகள், இடைநடுவில் வைத்தே திருப்பி அனுப்பப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளன.
கொழும்புக்குச் செல்வதற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்தாமையால், பேருந்துகள் திருப்பியனுப்பப்படுகின்றன என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்புக்கான சகல வீதிகளிலும் காவற்துறை சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் கொழும்புக்குச் செல்வதற்கு அனுமதியளிக்கப்படுகின்றன.
Spread the love