214
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று(20) யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார்.
இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வசாவிளான் இயற்கை உர தோட்டம் உள்ளிட்ட சிலவற்றை பார்வையிட்டதுடன் பயனாளிகளுடனும் கலந்துரையாடினார்.
நாளை(21) காலை இடம்பெறவுள்ள இலங்கை மத்திய வங்கியின் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்த மத்திய வங்கி ஆளுநரது பயணம் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகின்றது.
Spread the love