தென்னாபிரிக்காவில் புதிய வகை வீாியம் மிக்க கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, தென்னாபிரிக்க கண்டத்தில் உள்ள 6 நாடுகளுக்குத் தடை விதித்து பிரித்தானியா உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடங்கியுள்ளது. பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியும் கூட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.. . மக்கள் தொகையில் 29 சதவீதமானோாா் 3-வது டோஸ் செலுத்தியும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தென்னாபிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த மண்டல நாடுகளில் இருந்து வருவோருக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது. இதுகுறித்து பிரித்தானியாவின் சுகாதாரத்துறைச் செயலர் சஜித் ஜாவித் வெளியிட்ட அறிக்கையில், “தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், டெல்டா வகை வைரஸைவிட வீரியம் மிகுந்ததாக இருக்கிறது. தடுப்பூசிகளையும் எதிர்க்கும் திறன் மிகுந்ததாக இருக்கிறது. வேகமாகப் பரவும் தன்மை கொண்டிருக்கிறது. ஆதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தென்னாபிரிக்கக் கண்டத்தில் உள்ள 6 நாடுகளில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்படுகிறது.
இதன்படி, தென்னாபிரிக்கா, நமிபியா, லெசோதோ, எஸ்வாதினி, சிம்பாப்வே, போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் இருந்து பிரித்தானியா வருவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து வருவோர் விடுதிகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த உத்தரவுக்கு முன் வந்தவர்கள், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு 2-வது நாள் மற்றும் 8-வது நாளில் பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கடந்த 10 நாட்களுக்கு முன் இந்த நாடுகளில் இருந்து பிரித்தானியா வந்தவர்கள் பிசிஆர் பரிசோதனை செய்து மேற்கொள்ள வேண்டும் எனவும் தொிவித்துள்ளாா்.