
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67ஆவது பிறந்தநாள் இன்றைய தினமாகும். அவரின் பிறந்தநாளை கொண்டாடும் முகமாக யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் மாணவர்கள் அவரது உருவ படத்திற்கு முன்பாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அதேவேளை மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலை கழக சூழல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் இராணுவத்தினர் , காவல்துறையினா் குவிக்கப்பட்டுள்ளதுடன் , புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Spread the love
Add Comment