
வடமாகாணத்தை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மன்னாரில் நடை பெறவுள்ளது.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான எதிர் வரும் 03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற உள்ளது.
மாந்தை மேற்கு மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற உள்ள குறித்த நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி ஏ.சகிலா பானு கலந்து கொள்ளவுள்ளார்.
குறித்த ‘மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள்’ நூலானது இயலாமைக்குள் இயலுமையைக் கொண்டவர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
Add Comment