Home இலங்கைதிரைக்கு வருகிறது “புத்திகெட்ட மனிதர் எல்லாம்”

திரைக்கு வருகிறது “புத்திகெட்ட மனிதர் எல்லாம்”

by admin

வாழ்க்கையில் இரண்டு மணித்தியாலங்களை எங்களை நம்பி செலவழியுங்கள் உங்களை நாங்கள் நிச்சயம் மகிழ்விப்போம்.  இத்துறைக்கு வந்து 11 வருடங்களின் பின்னர் எம்மவரை நம்பி முழுநீள திரைப்படம் ஒன்றை எடுத்து உங்கள் முன் வருகிறோம் எங்களுக்கு நீங்கள் முழு ஆதரவையும் தருவீர்கள் என நம்பிகிறோம் என “புத்திகெட்ட மனிதர் எல்லாம்” என்கிற முழு நீளத் திரைப்படத்தின் இயக்குனர் சி.சிவராஜ் தெரிவித்தார். 

“புத்திகெட்ட மனிதர் எல்லாம்” என்கிற முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று (3) மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் வைத்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.


அதன் போது , இயக்குனர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். அத்துடன் படத்தில் பணியாற்றியவர்கள் தங்களது அனுபவங்கள் திரைப்படம் தொடர்பான விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.


“புத்திகெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படம் டிசம்பர் 24,25,26ம் திகதிகளில் யாழில் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ராஜ் சிவராஜின் இயக்கத்தில் பூவன் மதீசனின் இசையில் உள்நாட்டுக் கலைஞர்கள் பலரின் பங்கேற்பில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More