Home இலங்கை யாழில் கையெழுத்து வேட்டை

யாழில் கையெழுத்து வேட்டை

by admin

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம்  யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 


தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையும் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த மக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்றையதினம் யாழ்ப்பாண நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர்  ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை  இடம்பெற்ற நிலையில் இன்றையதினம் யாழ் நகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More