இலங்கை பிரதான செய்திகள்

மற்றுமொரு படகுப்பாதை கவிழ்ந்தது – ஒருவரைக் காணவில்லை

களுத்துறை – பொலஸ்ஸகம பகுதியில் களுகங்கையின் இறங்குதுறைக்கு அருகிலுள்ள பாலத்திற்கு அருகில் படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமற்போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

நேற்று (03) மாலை குறித்த படகுப்பாதையில் 05 நபா்களுடன் , மூன்று மோட்டார் சைக்கிள்களும் சைக்கிளொன்றும் பயணித்த நிலையில் அவை ஆற்றில் மூழ்கியுள்ளதாகவும் இதன்போது ஒருவா் காணாமற்போனதாகவும் தொிவித்துள்ள காவல்துறையினா் காணாமல் போன நபர் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தொிவித்துள்ளனா்.

காணாமல் போனவரைத் தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ள அதேவேளை ஆற்றில் மூழ்கிய போது காப்பற்றப்பட்டவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை இழுமைப்படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.