சபாநாயகரிடம் இருந்து தங்களின் பாதுகாப்பு குறித்து தெளிவான பதில் கிடைக்காததால், நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடப்படவில்லை என ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாத்திரமே இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.