176
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட வடமத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமத்திய மாகாண ஆளுநராக கடமையாற்றிய ராஜா கொலுரே அண்மையில் உயிாிழந்திருந்த நிலையில், அவரது இடத்துக்கே வசந்த கரன்னாகொட நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடா்பில் வசந்த கரன்னாகொட சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love