139
யாழில் , சாரதி பயிற்சி கல்லூரி வாகனம் மோதி படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கூத்துக் கலைஞரான ஊர்காவற்துறை தம்பட்டி பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி லட்சுமணன் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 6ஆம் திகதி, யாழ்ப்பாணம் 4ஆம் குறுக்கு தெருவில் சாரதி பயிற்சி கல்லூரி (லேனர்ஸ்) வாகனம் மோதி படுகாயமடைந்திருந்தார். அதனை அடுத்து அவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love