
யாழ்.கல்லுண்டாய் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அந்த இடத்தை முற்றுகையிட்ட இராணுவ புலனாய்வு பிரிவினர், போதைப்பொருள் வியாபாரியை கைது செய்ததுடன், அவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 10 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்
Spread the love
Add Comment