இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் David Holly யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன் போது வைத்தியசாலையின் செயற்பாடுகள் பற்றியும், தொடர்ச்சியாக போதனா வைத்தியசாலைக்கு அவுஸ்திரேலியாவில் இருந்து இயங்கி வரும் அவுஸ்திரேலிய மருத்துவ உதவி அமையம் (Australia Medical Aid Foundation) உதவிகள் பற்றியும் பேசப்பட்டதாக , யாழ்.போதனா வைத்திய பணிப்பாளர் தெரிவித்துள்ளார்