224
இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையில் தூதரக அதிகாரிகள் குழு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நிலையில் , யாழ்.பொது நூலகத்திற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார்.
அதன் போது , அங்கு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியும் இருந்தார். அத்துடன் நூலகத்திற்கு உதவிகளையும் வழங்கியுள்ளார்.
அதேவேளை யாழ்.பொது நூலகத்தினுள் உள்ள ” இந்தியன் சென்ரர்” பகுதியையும் சீன தூதுவர் பார்வையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love