
தொண்டமனாறு உயரப்புலம் பகுதியில் உருக்குலைந்த நிலையில் மனித எச்சங்கள் கரையொதுங்கியுள்ளதாக வல்வெட்டித்துறை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். மனித எச்சங்கள் தொடர்பில் மீனவர்களால் வல்வெட்டித்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து அவை மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனித எச்சங்கள் யாருடையது என இதுவரை அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்த காணப்படுவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் வட கடல் கரையோரங்களில், மனித உடல்கள் கரையொதுங்குவது அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில் அவை யாவும் அடையாளம் காணப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment