வடக்கு மாகாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் இன்று வியாழக்கிழமை (16) மாலை மன்னார் மாவட்டத்திற்கு டிசன்றுள்ளாா். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனா வினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில்,மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கும் குறித்த வாழ்வாதார உதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
-இன்று (16) வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு சென்ற சீனத் தூதுவர் மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களை சந்தித்தார். -இதன் போது மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு உணவுப் பொதிகள் மற்றும் வலை தொகுதிகளையும் வழங்கி வைத்தார்.
மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் கலந்து கொண்டு, சீனத் தூதுவருடன் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கி வைத்தனர்.இதன் போது மன்னார் மாவட்ட மீனவ அமைப்புகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.