அமெரிக்க படைப்பிரிவில் ஒன்றான மரைன் கார்ப்ஸில் 100-க்கும் மேற்பட்ட துருப்பினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மரைன் கார்ப்ஸ் படைப்பிரிவிலிருந்து வெளியான அறிக்கையில், இதுவரை 103 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் தொிவிக்கப்பட்டுள்ளது
நவம்பர் 28ஆம் திகதிக்குள் மரைன் கார்ப்ஸ் பணியிலுள்ள துருப்புகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொிவிக்கப்பட்டிருந்த நிலையில் மரைன் பிரிவில் 95% பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதுடன் 1,007 பேருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் இதுவரை இரு பட்டாலியன் கமாண்டர்கள் உட்பட ஆறு உயர் அதிகாரிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.