பிலிப்பைன்சை கடந்த கடந்த வியாழக்கிழமை தாக்கிய சூப்பர் ராய் எனும் மிகப்பெரிய சூறாவளி காரணமாக குறைந்தது 375 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தொிவித்துள்ளது. .
இதில் குறைந்தது 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் 56 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அந்நாட்டு காவல்துறை தொிவித்துள்ளது. .
பிலிப்பைன்ஸ் புயல் – 208 போ் பலி- 52 பேரைக் காணவில்லை
December 20, 2021 8:55 am
பிலிப்பைன்ஸ் நாட்டை கடந்த வியாழக்கிழமை தாக்கிய சூப்பர் ராய் புயலால் சுமார் 208 பேர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் தொிவித்துள்ளன. மேலும் 239 பேர் காயமடைந்திருப்பதாகவும், 52 பேரைக் காணவில்லை எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு தீவுகளில் வீசிய சூப்பர் ராய் புயலால் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புயலால் ஏற்பட்ட சேதம் மிகவும் மோசமாக இருப்பதாக மீட்புப் படையினர் தொிவித்துள்ளனா். நாட்டின் பல பகுதிகளில் தொலைத் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், புயலால் ஏற்பட்ட சேதங்களை சரியாக மதிப்பிட்டுக் கூற முடியவில்லை.
அதே போன்று குடிநீா் பற்றாக்குறையாக இருக்கிறது என்பதுடன் நாட்டின் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதனால் கூடுதலான மக்கள் பலியாகி இருக்கலாம் எனவும் அச்சம் வெளியடப்பட்டுள்ளது.