Home இலங்கைவைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால் மக்கள் அவதி

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால் மக்கள் அவதி

by admin

(க.கிஷாந்தன்)

இலங்கையில் நாடளாவியாீதியில் வைத்தியர்கள் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பு காரணமாக மக்கள் பெரும் சிரமங்களை எதிா்நோக்கியுள்ளனா். அந்தவகையில் இன்று (21) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற சென்ற நோயாளிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகினர்.

தோட்டத் தொழிலாளர்கள் உட்பட பலர் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் பற்றி அறியாததால் வைத்தியசாலைக்கும் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளிலும் மருத்துவ சிகிச்சையை நாடினர்.

வேலை நிறுத்தம் காரணமாக சிகிச்சை பெறாமல் வீடு திரும்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தமை குறிப்பிடதக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More