161
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 157 ரூபாவான , 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 95 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை , ஒட்டோ டீசல் 1 111 ரூபாயிலிருந்து 121 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் சுப்பர் டீசல் லீற்றர் 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 77 ரூபாவிலிருந்து 87 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Spread the love