Home உலகம் டென்மார்க்கில் குற்றம் புரிந்தால் இனி கொசோவோ நாட்டில் சிறை

டென்மார்க்கில் குற்றம் புரிந்தால் இனி கொசோவோ நாட்டில் சிறை

by admin

டென்மார்க் அதன் வெளிநாட்டுச் சிறைக் கைதிகளை கோசோவோ நாட்டில் உள்ள சிறைகளுக்கு மாற்றவுள்ளது. அதற்காக இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருக்கிறது.முதற் கட்டமாக 300 சிறை அறைகளை டென்மார்க் கைதிகளுக்கு வழங்குவதற்கு கொசோவோ முன்வந்துள்ளது.

அடுத்த ஐந்து வருட காலப்பகுதியில் சிறைகளுக்கு வாடகையாக டெனிஷ் அரசு வருடாந்தம் 15 மில்லியன் ஈரோக்களைக் வழங்கும். கொசோவோ தலைநகர் பிரிஸ்டினாவில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர்கள் தொலைவில் Gjilan என்ற இடத்தில் அமைந்துள்ள சிறைக்குக் கைதிகளை அனுப்புவது எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்துஆரம்பிக்கப்படும்.

கைதிகள் டென்மார்க் சிறைகளில் உள்ள அதே வசதிகளுடன்அங்கு வைத்துப் பராமரிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்கன்டிநேவியன் நாடான டென்மார்க் கைதிகளைப் பராமரிப்பதற்கான சிறைவசதிகள் மற்றும் சிறைக் காவலர்கள் பற்றாக்குறை காரணமாகப் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.

சிறைகள் இடவசதியின்றி நிரம்பியுள்ளன. நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலைகளை அமைக்கும் வரை வெளிநாட்டில் சிறைகளை வாடகைக்குப் பெறவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ந்த பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனிமேல் சிறைத் தண்டனை பெற்றால் அத்தகையோர் கொசோவோ நாட்டில் உள்ள சிறைகளுக்கு நாடுகடத்தப்பட்டு அங்கு அடைக்கப்படுவார்கள். டென்மார்க்கில் குற்றம் புரியும் வெளிநாட்டவர்களுக்கு இனி அந்த மண்ணில் இடமில்லை என்ற செய்தியும் இதில் அடங்கியுள்ளது என்று அந்நாட்டின் நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

கைதிகளை வாடகைச் சிறைகளில் தங்கவைக்கின்ற இந்தத் திட்டத்துக்கு இருநாடுகளிலும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி உள்ளது.கைதிகளை அவர்களது உறவினர்களிடம் இருந்து தொலைவில் வேறு நாட்டில்அடைப்பது அவர்களது உரிமைகளை மீறுவதாகக் குரல்கள் எழுந்துள்ளன.

ஆனால் ஐரோப்பாவில் இதுபோன்று நோர்வே, பெல்ஜியம் ஆகிய நாடுகள் தங்களது கைதிகளை நெதர்லாந்தில்உ ள்ள சிறைகளில் அடைத்துள்ளன.டென்மார்க்கின் பயங்கரவாதக் கைதிகளுக்கும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்கும் தமது சிறைகளில் இடமளிக்கப்படமாட்டாது என்று கொசோவோ நாட்டின் நீதி அமைச்சர்உறுதி அளித்துள்ளார். டென்மார்க்குடனான வாடகைச் சிறை உடன்படிக்கைக்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இனிமேல்தான் ஒப்புதல் பெறவேண்டி உள்ளது.

கொசோவோ ஜரோப்பாவில் அண்மைக்காலத்தில் உருவாகிய புதிய சுதந்திர தேசம் ஆகும். பிரிவினை கோரிய அல்பேனிய இனத்தவருக்கும்(ethnic Albanian)செர்பியப் படைகளுக்கும் (Serb forces)இடையே 1998-1999 ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட கொடூர யுத்தம் நேட்டோ நாடுகளது தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்தது.

அதன் பின்பு ஒன்பது ஆண்டுகள் கழித்து 2008 இல் கோசோவோ செர்பியாவில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாகியது. பெரும்பாலான நேட்டோ அணி நாடுகள் கோசோவோவின் இறைமையை ஏற்று அங்கீகரித்துள்ள போதிலும் சேர்பியாவும்அதன் நேச அணிகளான ரஷ்யா, சீனாபோன்ற நாடுகள் அதனை அங்கீகரிக்கமறுத்து வருகின்றன.அதனால் அங்குஎப்போதும் பதற்றமான அரசியல் நிலைநீடிக்கிறது.

——————————————————————- –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 22-12-2021

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More