பன்னல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பல்லேகம எலிபிச்சிய பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் . மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது
நீர்கொழும்பு பகுதி வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான 17 ஏக்கர் காணியில் அமைந்துள்ள கோழிப்பண்ணையிலேயே இன்று (24) அதிகாலை இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த கோழிப்பண்ணையில் சுமார் 35,000 குஞ்சுகளை அடைக்கக்கூடிய ஏழு கூடங்கள் உள்ள நிலையில் அதில் ஒரு கூடத்திலேயே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
கோழிக் குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தை ஏற்படுத்த 37.5 கிலோகிராம் எடையுள்ள மூன்று எரிவாயு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினா் சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.
மேலும் நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் காவல்துறையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் சேத விபரங்கள் குறித்து இதுவரை கணக்கிடப்படவில்லை எனத் தொிவித்துள்ள பன்னல காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.