141
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்றது. குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிக கொட்டில் ஒன்றில் குறித்த அலுவலகம் இயங்கி வந்த நிலையில் , அலுவலகத்தின் மேற் கூரையின்றிய நிலையில் காணப்படுகின்றது.
குறித்த அலுவலகத்தினுள் கதிரை மேசைகள் உள்ளிட்ட அலுவலக பொருட்கள் சிலவும் காணப்பட்டன. அலுவலகத்தின் கதவும் பழுதடைந்த நிலையில் திறந்தவாறே காணப்படுவதுடன் . பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உருவ படம் ஒன்றும் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்தது.
Spread the love