Home இலங்கை நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக வாள்வெட்டு

நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக வாள்வெட்டு

by admin

கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நல்லூர் சட்டநாதர் ஆலயத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல்துறையினா் கூறினர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த 28 வயதுடைய வர்த்தகர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.காசுக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உள்ள முரண்பாடு காரணமாக இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினா் குறிப்பிட்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More