உலகம் பிரதான செய்திகள்

சைப்பிரஸில் “டெல்ராக்ரோன்”கலப்புத் திரிபுத் தொற்றுக்கள்

டெல்ரா மற்றும் ஒமெக்ரோன் திரிபுகள் இரண்டினதும் மரபுகள் இணைந்தபுதிய கொரோனா வைரஸ் திரிபு ஒன்றைத் தாங்கள் அடையாளம் கண்டுள்ளனர் என்ற தகவலை சைப்பிரஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் குழுவெளியிட்டிருக்கிறது.

சுமார் 25 பேருக்கு அந்தக் கலப்பு வைரஸ்தொற்று ஏற்பட்டிருப்பதை சைப்பிரஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல்தொழில்நுட்பம் மற்றும் மூலக்கூற்றியல்துறைத் தலைவர் (head of the Laboratory of Biotechnology and Molecular Virology) லியோண்டியோஸ் கோஸ்ட்ரிகிஸ்(Leondios Kostrikis) தெரிவித்திருக்கிறார்.

ஒமெக்ரோனை ஒத்த மரபியல் அடையாளங்களும் (genetic signatures) டெல்ராவின் மரபணுக்களும் (delta genomes)இணைந்து காணப்படுகின்ற அந்தத் திரிபுக்கு அவர்கள் “டெல்ராக்ரோன்” (deltacron) எனப் பெயரிட்டிருக்கின்றனர்.அது வேகமாகப் பரவக் கூடிய ஆபத்தான திரிபாக மாறக் கூடுமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.மேலதிக ஆய்வுகளுக்காக அந்தக் கலப்புத் திரிபு பாரிஸ் பஸ்தர் நிறுவனத்திடமும், மரபணுக்களை வரிசைப்படுத்துகின்ற சர்வதேச GISAID நிறுவனத்திடமும்ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்ட கலப்பு வைரஸ் தொற்றுத்தான். ஒன்றுக்கு மேற்பட்டதிரிபுகள் பெருமெடுப்பில் பரவும் போது இவ்வாறு கலப்பு மரபு கொண்ட வைரஸ்தொற்றுக்கள் நிகழ வாய்ப்புண்டு என்றுதொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகெங்கும் டெல்ரா,ஒமெக்ரோன்இரண்டும் பரந்த அளவில் ஆக்கிரமித்துப்பரவியுள்ளதால் அவற்றின் மத்தியில்கலப்புத் திரிபுகள் உருவாக வாய்ப்புகள்அதிகம் என்று நம்பப்படுகிறது.

இஸ்ரேலில் அண்மையில் கர்பிணிப்பெண் ஒருவருக்கு வைரஸ் சளிக் காய்ச்சல் மற்றும் ஒமெக்ரோன் வைரஸ்இரண்டும் ஒரே நேரத்தில் பீடித்திருந்தமையை மருத்துவர்கள் கண்டறிந்திருந்தனர்.

பிரான்ஸின் மத்தியதரைக் கடலுடன் அண்டிய மார்செய் பிராந்திய மருத்துவமனை நிர்வாகத்தினர் அண்மையில்புதிய திரிபு ஒன்றைக் கண்டறிந்தனர்.மார்செய் பல்கலைக்கழக மருத்துவமனையின் பெயரில் (Marseille University Hospital-IHU) அது IHU திரிபு என்று அழைக்கப்படுகிறது.

——————————————————————–

குமாரதாஸன். பாரிஸ்.09-01-2022

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.