190
திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு பயணித்த பயணிகள் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதாகவும் காயமடைந்தவர்களில் வாகனங்கள் இரண்டினதும் சாரதிகளும் உள்ளடங்குவதாகவும் , காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love