லிட்ரோ எாிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க இன்று (13) பதவியில் இருந்து நீக்கப்பட்டு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயு தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரதூரமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு தெசார ஜயசிங்க தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தலைவர் அனில் கொஸ்வத்த பதவி விலகியதையடுத்து தெசார ஜயசிங்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தாா்.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் லிட்ரோ எாிவாயு நிறுவனத்துக்கு இரண்டு தலைவர்கள் நியமிக்கப்பட்டதுடன் மூன்றாவது தலைவராக ரேணுகா பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.