தெற்கு பசிபிக் பகுதியில் உண்டான எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி அலைகள் ஏற்படலாம் என அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசுகள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பசி பிக் பெருங்கடலின் கடலோரப் பகுதிகளில் இருக்கும் அமெரிக்க மற்றும் ஜப்பான் மக்கள் உடனே அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பசிபிக் ஒசியானா பகுதியில் அமைந்துள்ள டோங்கா k மற்றும் பிஜி தீவுகளை அண்மித்துள்ள கடல் பகுதிகளில், கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு உண்டானதன் காரணமாக அப்பகுதிகளில் கடும் புகை மூட்டம் உண்டாகியுள்ளதனால் பிஜி அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் கடலோரப் பகுதிகளில் நிவாரண முகாம்களைத் திறந்துள்ளது.
டோங்காவில் பெரும்பாலான பகுதிகளில் எரிமலை சாம்பல் படர்ந்துள்ள நிலையில் எரிமலை வெடிப்பால் உண்டான பாிப்புகள் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது