Home இலங்கைகடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுவர்களும் சடலங்களாக மீட்பு

கடலில் மூழ்கி காணாமல் போன இரு சிறுவர்களும் சடலங்களாக மீட்பு

by admin

மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கயுவத்தை கடலில் நேற்றைமுன்தினம் (14) நீராடிய ஏழு சிறுவர்களில் கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவா்கள் இருவரதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்தச.அக்சயன் (வயது 16), ஜீவானந்தா சுஜானந்தன் (வயது 16)  (வயது 16) ஆகிய இரு சிறுவர்களது சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

காணாமல் போன இரு சிறுவர்களையும் தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை மாலை வரை தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில், நேற்று (15) பிற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர்.

நீரில் மூழ்கி மரணமடைந்த இரு சிறுவர்களின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More