166
அவுஸ்திரேலியாவில் எதிா்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2022 இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
போட்டியின் முதற்சுற்று போட்டிகள் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கீலொங்கில் நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் போட்டியிடவுள்ளன.
முதல்சுற்றில் நான்கு அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் ஒக்டோபர் 22 ஆம் திகதி சூப்பர் 12 சுற்று சிட்னியில் ஆரம்பமாக உள்ளது. சூப்பர் 2 சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love