159
கிளிநொச்சி – தர்மபுரம், புன்னைநீராவி பகுதியில் தாயும் மகளும் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி எனும் 07 பிள்ளைகளின் தாயும், 17 வயதான லக்சிகா எனும் அவரது மகளுமே இன்று (21) மாலை இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
வீடு தீப்பற்றியதால் இவர்கள் உயிரிழந்தனரா, அல்லது யாரேனும் கொலை செய்தனரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள தர்மபுரம் காவல்துறையினா் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love