194
மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையில் உள்ள 20 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்பட்டுள்ளது. மும்பை பாட்டியா மருத்துவமனைக்கு அருகில் உள்ள 20 மாடிகள் கொண்ட கமலா கட்டிடத்தின் 3வது அடுக்கிலேயே இன்று காலை இத் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினா் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த விபத்தில் மேலும் பதினைந்து பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love