அரசாங்கம் அண்மையில் பெற்ற கடன்கள் மற்றும் உதவிப் பொதிகளுக்கு மேலதிகமாக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடமிருந்து பெறக் கூடும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பீரிஸ், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் இலங்கைக்கு பாரிய உதவிப் பொதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு மாற்றாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவையும் அரசாங்கம் பெற முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தேவைப்படும் நேரத்தில், நேச நாடுகள் இலங்கைக்கு உதவி செய்வதால் நாடு தனிமைப்படுத்தப்படவில்லை அல்லது திவால்நிலையின் விளிம்பில் இல்லை என்று குறிப்பிட்டார்.