176
கந்துருகஸ்ஆர வேலைத்தளத்தில் கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், சிறைக்காவலர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலைத்தளத்துக்குப் பொறுப்பான சிறைக்காவலர், சார்ஜன்ட் சிறைக்காவலர் மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சிறைக்காவலர் ஆகியோரே உடன் அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளாா்.
மேலும் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளாா்.
Spread the love