154
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்திய சாலையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்றைய தினம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
யாழ்.மாநகர சபை உறுப்பினர் நீ.பிலிப்பின் வட்டார நிதி ஒதுக்கீட்டில் , குறித்த ஆயுள்வேத வைத்திய சாலை புனரமைக்கப்பட்ட நிலையில் , இன்றைய தினம் மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் , யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர பிரதி ஆணையாளர், செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
Spread the love