கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குபட்ட முரசுமோட்டை மற்றும் ஐயன்கோயிலடிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்தி தங்களுடைய விவசாய நிலங்களை பாதுகாத்துத் தருமாறு கோரி கமக்கார அமைப்புகளால் இன்று நீதியமைச்சரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட முரசுமோட்டை ஐயன்கோவில் மற்றும் மருதன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அது தொடா்பில் காவல்துறையினா் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உயர் அதிகாரிகளுக்கு கடந்த வாரம் மகஜர்களை வழங்கிய போதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்டவில்லை.
இந்தநிலையில் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் சட்டரீதியற்ற மணல்அகழ்வு மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது இதன் போதே மாவட்ட செயலகத்தில் வைத்து கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் மகஜரைக் கையளித்துள்ளனா்.