தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு இலங்கை யைச் சோ்ந்த பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இவர் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியமை என்ஐஏ விசாரணையில் தொிய வந்துள்ளதாகவும் குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டவா் இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ எனவும் இவா் 2018ல் சென்னைக்கு சென்று அண்ணாநகரில் தங்கியிருந்து அதே முகவரியில் ரேஷன் கார்ட் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது