135
இலங்கையில் இருந்தவாறு வெளிநாடுகளில் சட்டவிரோத நிதி வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐவர் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் நேற்று (29.01.22) டுபாய் செல்ல முயற்சித்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேகநபர்களிடமிருந்து, அவர்களது பயணப் பொதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 25 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் சிக்கியுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவின் போதை ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love