இலங்கையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் 12 மாவட்டங்களும், 81 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் டெங்கு அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், புத்தளம், காலி, யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு அதிகம் ஆபத்துள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் 7,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இந்த மாதத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள அதேவேளை, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது