ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் , ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 15ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி 27 வயதுடைய ஞானசேகரன் ஹம்சிகா எனும் 7 மாத கர்ப்பிணியான பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
அது தொடர்பிலான விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வந்த நிலையில் ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலை நடந்த அன்றைய தினமே சகோதரர்கள் இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 17 மாத காலம் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படிருந்த நிலையில் மேல் நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு சிறுமி படுகொலை குற்றவாளிக்கு ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில் தகவல்கள் தெரியும் ?
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கினை திசை மாற்ற முயற்சி ?