Home இலங்கை நுவரெலியாவுக்கு அநீதி – வடக்கில் கையெழுத்து வேட்டை!

நுவரெலியாவுக்கு அநீதி – வடக்கில் கையெழுத்து வேட்டை!

by admin

நுவரெலியா பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக வடக்கின் ஆதரவு கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் நியாய கோரிக்கையை முன்வைத்தும் மலையக அரசியல் அரங்கம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை கிளிநொச்சியில் நேற்று (03.02.22) இடம்பெற்றது.

இதன் போது மலையக அரசியல் அரங்கம் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ம. திலகராஜ் கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆக உள்ள பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 10 ஆகஅதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை2018 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. அமைச்சரவை அனுமதியின் பின்னர் புதியபிரதேச செயலகங்கள் தொடர்பில் 2019 இல் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் நுவரெலியாவில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களும், காலியில் 3 பிரதேச செயலகங்களும் நிறுவப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதன்படி காலி மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், நுவரெலியா மாவட்டத்துக்கான பிரதேச செயலகங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக இரண்டு உப செயலகங்கள்அமைக்கப்பட்டுள்ளன. இது நுவரெலியா மாவட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பெரும்அநீதியாகும்.

எனவேதான் எமக்கு பிரதேச செயலகங்களே வேண்டும் என வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் இந்த கையெழுத்து போராட்ட நடவடிக்கைக்கு வடக்கு மக்களின் ஆதரவினை கோரியே வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய கையெழுத்து பெறும் நிகழ்வில் கிளிநொச்சியிலும் மேற்கொண்டுள்ளளோம். எனத் தெரிவித்த அவர் முதன் முதலாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் இந்த விடயத்திற்கு ஆதரவாக தங்களது கையெழுத்துக்களை சமர்பித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More