யாழ்ப்பாணம், கட்டுவன் – மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்மிற்கான பாதையில் 400 மீற்றர் பாதையக அபகரித்துள்ள படையினர் வீதியை விட மறுத்து தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் ஊடாக தற்போது பாதை அமைக்கும் விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு சட்டப்படி சுவீகரிக்காது நில உரிமையாளரின் சம்மதம் இன்றி அவர்களின் கிணறுகளை இடித்து அழித்து அதன் மேல் புதிய வீதிகளை அமைக்கின்றனர்.
அதனை தேரில் பார்வையிட்டு அடுத்த சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காகவே சம்பவ இடத்திற்கு வருகை தந்த்தாக குறிப்பிட்டதோடு அடுத்த கட்டமாக இந்த விடயமும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரோடு நில உரிமையாளர்கள், வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.