173
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் – மாட்டு வண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூளாய் பகுதியை சேர்ந்த சின்னையா லோகேஸ்வரன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாண கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடையாக குறித்த இளைஞன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love