
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பெப்ரவரி 19ல் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது.
தேர்தலில் பதிவாகியுள்ள முடிவுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி 7621 மொத்த பதவியிடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 4388 இடங்களை கைப்பற்றியுள்ளது.
அத்தோடு திமுக தலைமையிலான கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. 138 நகராட்சிகளில் 132க்கும் மேலான நகராட்சிகளில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.
11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது
Add Comment